About the Department
1998 – 1999 ஆம் கல்வியாண்டில் இளங்கலைத் தமிழுடன் முதுகலை தமிழ்த்துறை இன்று எம்.ஏ. எம்ஃபில் வரை வளர்ச்சி பெற்றுள்ளது இத்துறையில், பயின்ற மாணவியர் பலர் VAO TNPSC போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு பணிகளிலும் மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளிலும் சிறப்பான பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது தமிழ்த்துறையில் பணிபுரியும் பேராசிரியர்களுள் 7 பேர் முழு தகுதியுடன் இங்கு பயின்ற முன்னாற் மாணவியர் என்பது பெருமைக்குரியது.
அனைத்து துறைகள் மாணவியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களின் பேச்சாற்றல் எழுத்தாற்றல் படைப்பாற்றல் நினைவாற்றல்களை வெளிப்படுத்தும் நோக்கில் பல்வேறு போட்டிகளுக்கு தயார் படுத்தி பல விருதுகளை பதக்கங்களை ரொக்கங்கள் பெற்றுத் தந்துள்ளது. இத்துறை தேசிய மற்றும் மாநில அளவில் வரும் போட்டிகளுக்கும் அறிஞர் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், அப்துல்கலாம், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட ஆன்றோர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் பல நடத்தி வருகிறது.
மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப மாணவ சமூகம் உண்மை உழைப்பு சத்தியத்துடன் வாழ காந்திய சிந்தனை சான்றிதழ் மற்றும் பட்டய தேர்வு எழுத பல்லாண்டுகாலம் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறது.
பழைய பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரத்தை மாணவியர்கள் மறவாமலிருக்க இராமாயணம் மகாபாரதம் விவேகாநந்தர் போன்ற பண்பாட்டுத் தேர்வுகளும் பாரம்பரிய உணவுத்திருவிழாவும் நடத்தி வந்து இத்துறை மாணவியர்களுக்கு கண்ணுக்கும் செவிக்கும் விருந்தளித்து சிரிக்க சிந்திக்க ஆண்டு தோறும் ‘முத்தமிழ் விழா’ கல்லூரிக்கு பெருமையும் சிறப்பும் சேர்ப்பது பேரவை. அப்பேரவை பொறுப்பை ஏற்று பல ஆண்டுகாலம் ஏப்ரல் 2018 வரை சிறப்பான பணிமேற்கொண்டு வந்துள்ளது என்பது தமிழ்த்துறை மகளிர்க்கு பெருமை சேர்க்ககும். ‘மகளிர் தினவிழா’ பெற்றோர் ஆசிரியர் கழகம் முன்னியில் மாணவர் சங்கம் பட்டமளிப்பு விழா விளையாட்டு நாட்டு நலப்பணித்திட்டம் செஞ்சிலுவை சங்கம் போன்றவைகளில் பொறுப்பேற்று பணிமேற் கொண்டது இத்துறை பல்கலைக்கழக பருவத்தேர்வுகளில் பொறுப்புவுணா்வுடன் பல்வேறு தேர்வுகளையும் பொறுப்பேற்று செயல்பட்டுள்ளது இத்துறை பல மாணவர்களுக்கு அறிவாற்றலை தலைமைப் பண்பை வளர்க்க புதன் வட்டம் வெள்ளி வட்டம் இலக்கிய வட்டம் கருத்தரங்குகள் பயிலரங்குகள் கருத்துப்பட்டறைகள் பட்டிமன்றங்கள் இன்ன பிற ஆசிரியர் பணியே அறப்பணி அதற்குனை அர்பணி என்பது தமிழ்துறையின் தாரக மந்திரம். பொது நலத்தில் மகிழ்வுறும் தமிழ்த்துறை.