தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு ஊா்வலம்
நிலக்கோடடை அருகே குளத்துப்பட்டி அரசு மகளிா் கலைக் கல்லூாியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூாி முதல்வா் பெத்தாலட்சுமி தலைமை தாங்கினாா். நிலக்கோட்டை தாசில்தாா் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். தோ்தல் பிாிவு துணை தாசில்தாா் டேனியல் பிரேம்குமாா் வாக்காளா் தினம் குறித்து பேசினாா். கருத்தரங்கில் பேராசிாியை பரமேஸ்வாி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் லட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.