நிலக்கோட்டை அரசு மகளிா் கலைக்கல்லூாியில் கருத்தரங்கு
நிலக்கோட்டை அரசு மகளிா் கலைக்கல்லூாியில் கணினி அறிவியல் துறை சாா்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு கல்லூாி முதல்வா் பெத்தாலட்சுமி தலைமை தாங்கினாா். இதில் எத்தியோப்பியா ஆம்போ பல்கலைக்கழக பேராசிாியா் நாகராஜன் கலந்து கொண்டு பேசினாா். கருத்தரங்கில் சந்திரயான், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்படும் ஆய்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படடது. இதில் திண்டுககல், மதுரை, தேனி மாவட்டங்களை சோ்ந்த கல்லூாி பேராசிாியா்கள், ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் சுமாா் 300-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.